/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
20 ஆண்டாக கிடப்பில் பாலாறு மேம்படுத்தும் திட்டம் நிறைவேறுமா: திருப்புத்துார் வட்டார விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
20 ஆண்டாக கிடப்பில் பாலாறு மேம்படுத்தும் திட்டம் நிறைவேறுமா: திருப்புத்துார் வட்டார விவசாயிகள் எதிர்பார்ப்பு
20 ஆண்டாக கிடப்பில் பாலாறு மேம்படுத்தும் திட்டம் நிறைவேறுமா: திருப்புத்துார் வட்டார விவசாயிகள் எதிர்பார்ப்பு
20 ஆண்டாக கிடப்பில் பாலாறு மேம்படுத்தும் திட்டம் நிறைவேறுமா: திருப்புத்துார் வட்டார விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 31, 2024 01:35 AM

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கரந்தமலையிலிருந்து உற்பத்தியாகிறது பாலாறு.சிங்கம்புணரி வழியாக திருப்புத்துார் பெரிய கண்மாய்க்கு இந்த ஆறு மூலம் தண்ணீர் வருகிறது.
பெரிய கண்மாயிலிருந்து தென்மாப்பட்டு கண்மாய்க்கு பாண்டியன் கால்வாய் மூலமும், மணமேல்பட்டிக்கு கலுங்கு மூலமாகவும் பாய்கிறது. பின்னர் மணிமுத்தாறாக மாறி கல்லல் வழியாக சென்று கடலில் கலக்கிறது. திருப்புத்துார் பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு நீர்வரத்தை இந்த பாலாறு தருகிறது.
தற்போது பாலாற்றில் ஒவ்வொரு மழை காலத்திலும் ஆற்றில் நீரவரத்து ஏற்படும் போது சிங்கம்புணரி பகுதி வரை நீர்வரத்து காணப்படுகிறது. திருப்புத்துாரை கடந்து செல்வதில்லை. ஆறு முழுவதும் முட்செடிகள் வளர்ந்தும், கரைகள் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. ஆற்றின் அகலமே தெரிவதில்லை.
இதனால் பாலாற்றை மேம்படுத்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ரூ 2 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டது. ஆனால் திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. மேலும் மணல் திருட்டு, ஆக்கிரமிப்பால் ஆற்றின் வடிவமே உருக்குலைந்து காணப்படுகிறது.
வறட்சியான பகுதியில் செல்லும் இந்த ஆற்றை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான திட்டமிடலுடன், நிதி ஒதுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர். பாலாற்றை முழுமையாக அளவீடு செய்து கரைகள் அமைத்து பலப்படுத்தவும், கரையை அடுத்து மண் அரிப்பை தடுக்கும் மரங்கள் நடவு செய்யவும், ஆற்றினுள் உள்ள மரம்,புதர்களை அகற்ற வேண்டியதும் அவசியமாகிறது. ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை இணைக்கும் வகையில் கரைகளில் கற்கள் பதிக்கவும் விவசாயிகள் கோரியுள்ளனர்.
பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ரெகுலராக நீர் வரத்து உள்ள ஆறுகளில் மட்டுமே தூர்வாரும் திட்டத்திற்கு கூடுதல் நிதி அனுமதிக்கப்படுகிறது. பாலாற்றில் அணைக்கட்டுகளில் மட்டுமே பராமரிக்க நிதி ஒதுக்கப்படுகிறது' என்றார்.
அரசு கூடுதல் கவனம் செலுத்தி வறட்சியான பகுதியில் பாசனத்திற்கு மட்டுமின்றி நிலத்தடி நீர் வளம் பெற உதவும் பாலாற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

