/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பட்டமங்கலம் கடைத்தெரு ரோடு விரிவுபடுத்தப்படுமா
/
பட்டமங்கலம் கடைத்தெரு ரோடு விரிவுபடுத்தப்படுமா
ADDED : ஆக 11, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோஷ்டியூர்: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் பஸ் ஸ்டாப் பகுதியில் சேதமடைந்த குறுகிய ரோடால் போக்குவரத்து பாதிக்கிறது.
கல்லல் ஒன்றியம் பட்டமங்கலம் திருக்கோஷ்டியூர் - - கண்டரமாணிக்கம் ரோட்டில் உள்ளது. மேலும் இங்கிருந்து சொக்கநாதபுரம், திருப்புத்தூருக்கு ரோடு செல்கிறது. இந்த ரோடுகள் சந்திக்கும் இடங்கள் சேதமடைந்தும், குறுகியதாகவும் உள்ளது.
மேலும் பட்டமங்கலம் கடைவீதி வழியாக செல்லும் ரோடு குறுகியதாக இருப்பதோடு, சேதமடைந்துள்ளது. இணைப்பு ரோட்டை விரிவுபடுத்தி, ரோட்டை தரம் உயர்த்த வேண்டும்.