/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழைக்கு முன் துார்வாரப்படுமா வரத்துக் கால்வாய்கள்
/
மழைக்கு முன் துார்வாரப்படுமா வரத்துக் கால்வாய்கள்
ADDED : ஜூன் 19, 2025 02:39 AM

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டத்தில் 4800 க்கும் மேற்பட்ட பாசன கண்மாய்கள் உள்ளன. இதில் 129 வைகை பாசன கண்மாய்களும், 123 பெரியாறு பாசன கண்மாய்களும், 348 மழைப்பொழிவு கண்மாய்களும் அடங்கும். மற்றவை சிறுபாசன கண்மாய்கள். இவை தவிர சிங்கம்புணரி, மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 2500 ஜமீன் கண்மாய்களும் உள்ளன. இக்கண்மாய்கள் பல்வேறு கால இடைவெளியில் குடிமராமத்து உள்ளிட்ட பணி மூலம் தூர்வாரப்பட்டாலும், பல இடங்களில் வரத்து, பாசன கால்வாய்கள் தூர்வாரப்படாமல் மண்மூடி கிடக்கிறது. விவசாயிகள் முழுமையாக தண்ணீரை கண்மாய்க்கும் வயல்களுக்கும் கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
சில கால்வாய்களை அந்தந்த பகுதி விவசாயிகள் மழைக்காலங்களில் மேலோட்டமாக தூர்வாரி தண்ணீரை சிரமப்பட்டு கண்மாய்களுக்கு கொண்டு வந்து பிறகு வயல்களுக்கு பாய்ச்சுகின்றனர். தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் அடுத்து வர இருக்கும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக அனைத்து வரத்து, பாசன கால்வாய்களையும் தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.