/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெரியகண்மாய் பாலாறு கால்வாய் பாலம் அகலப்படுத்தப்படுமா
/
பெரியகண்மாய் பாலாறு கால்வாய் பாலம் அகலப்படுத்தப்படுமா
பெரியகண்மாய் பாலாறு கால்வாய் பாலம் அகலப்படுத்தப்படுமா
பெரியகண்மாய் பாலாறு கால்வாய் பாலம் அகலப்படுத்தப்படுமா
ADDED : அக் 28, 2025 03:49 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரிலிருந்து சிங்கம்புணரி செல்லும் ரோட்டில் பெரியகண்மாய் பாலாறு வரத்துக் கால்வாயில் உள்ள வாய்க்கால் பாலத்தை விரிவுபடுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்புத்துார் வரும் பாலாற்றில் சிங்கம்புணரி ரோட்டைக் கடந்து பெரிய கண்மாய்க்கு வரத்துக் கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது.
அந்த வரத்துக்கால்வாயிலிருந்து நகருக்குள் செல்லும் பிரிவுக் கால்வாய் மீண்டும் ரோட்டைக் கடந்து செல்கிறது. இந்த ரோடு தற்போது கொட்டாம்பட்டி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு விரிவு படுத்தப்பட்டுள்ளது.
ரோடு புனரமைக்கப்பட்ட போது பிரிவு கால்வாய் பகுதியில் பாலத்தை விரிவுபடுத்தவில்லை. மேலும் பாலத்திற்கான தடுப்புச்சுவரும் இருபுறமும் கட்டப்படவில்லை. அப்பகுதியில் மண் சரிவு அதிகரித்து விபத்து அபாயம் ஏற்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.