/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மீண்டும் மானாமதுரை-மன்னார்குடி ரயில் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மவுனம் கலையுமா
/
மீண்டும் மானாமதுரை-மன்னார்குடி ரயில் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மவுனம் கலையுமா
மீண்டும் மானாமதுரை-மன்னார்குடி ரயில் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மவுனம் கலையுமா
மீண்டும் மானாமதுரை-மன்னார்குடி ரயில் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மவுனம் கலையுமா
ADDED : ஜன 25, 2025 06:49 AM
சிவகங்கை : காரைக்குடியுடன் நிறுத்தப்படும் மன்னார்குடி ரயிலை மானாமதுரை வரை மீண்டும்நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
மானாமதுரை-மன்னார்குடி வரையிலானடெமு ரயில் 2012ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் மூலம் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர் மாவட்ட பயணிகள் பெரிதும் பயன் அடைந்து வந்தனர். இந்த ரயிலை மானாமதுரை-திருச்சி, திருச்சி-மன்னார்குடி வரை என இரண்டு பெயரில் இயக்கி வந்தனர்.
இந்த ரயிலால் போக்குவரத்தில் எந்தவித தடையுமின்றி, பயணிகளுக்கு ஏற்ற வகையில் இயங்கி கொண்டிருந்தது.கொரானோ காலத்தில் இந்த ரயில் நிறுத்தப்பட்டது. அதற்கு பின் மீண்டும் எந்தவித நிறுத்தங்களும் விடுபடாமல் இயக்கப்பட்டன.
2023ல் ஒடிசா ரயில் விபத்திற்கு பின், ரயில்வே வாரியம், ரயில்பாதை போக்குவரத்து தடை நேரம் என நாள் ஒன்றுக்கு மூன்று மணிநேரம் என அறிவித்தனர். அந்த வகையில் காரைக்குடி முதல் மானாமதுரை வரை மதியம் 12:25 முதல் மாலை 3:25 மணி வரை நிர்ணயித்தனர்.
இதனை காரணமாக வைத்து, திருச்சி - மானாமதுரை ரயிலை 2023 செப்.,8ம் தேதியிலிருந்து காரைக்குடியுடன் நிறுத்தி விட்டனர். 2025ம் ஆண்டு ஜனவரி முதல் டெமு ரயில் பெட்டிகள், ஐ.சி.எப்., பெட்டியாக மாற்றி இயக்கப்பட்டு வருகின்றன. முதலில் மன்னார்குடி - திருச்சி மற்றும் திருச்சி காரைக்குடி - வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.
மீண்டும்மன்னார்குடி-மானாமதுரை
நான்கு மாவட்ட பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே நிர்வாகம் ரயில்பாதை போக்குவரத்து தடை நேரம் பாதிக்காத வகையில், ரயிலின் நேரத்தை மாற்றி மானாமதுரை - திருச்சி - மன்னார்குடி ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனவே திருச்சி - காரைக்குடி ரயில் திருச்சியில் காலை 10:20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 9:00 மணிக்கு புறப்படும் படி மாற்றி அமைத்து, காலை 10:40 மணிக்கு காரைக்குடிக்கு வருமாறு மாற்றி அமைக்கலாம். அங்கிருந்து மானாமதுரைக்கு மதியம் 12:10 மணிக்கு சென்று சேரும் விதத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.
மானாமதுரையில் இருந்து தினமும் மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு, திருச்சி வழியாக மன்னார்குடி வரை தினமும் இந்த ரயிலை இயக்கவேண்டும்என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
எனவே மீண்டும் மானாமதுரை--திருச்சி- -மன்னார்குடி ரயிலை இயக்க சிவகங்கை எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ரயில்வே பயணிகள் நலக்குழுவினர் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.