/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆதாரில் திருத்தம் செய்ய குவியும் மாணவர்கள்: பள்ளிக்கு வருமா தற்காலிக ஆதார் மையம்
/
ஆதாரில் திருத்தம் செய்ய குவியும் மாணவர்கள்: பள்ளிக்கு வருமா தற்காலிக ஆதார் மையம்
ஆதாரில் திருத்தம் செய்ய குவியும் மாணவர்கள்: பள்ளிக்கு வருமா தற்காலிக ஆதார் மையம்
ஆதாரில் திருத்தம் செய்ய குவியும் மாணவர்கள்: பள்ளிக்கு வருமா தற்காலிக ஆதார் மையம்
ADDED : நவ 05, 2025 12:25 AM
சிவகங்கை: மத்திய அரசின் யு.டி.ஐ.எஸ்.இ., (கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு) போர்டலில் பள்ளிகள் தோறும் மாணவரின் ஆதார் எண், பிறந்த தேதி, பிறப்பு சான்றுடன் ஒத்துப்போகும் விதத்தில் பதிவேற்றுவதற்காக, ஆதாரில் திருத்தம் செய்ய பெற்றோருடன் மாணவர்கள் ஆதார் மையங்களுக்கு அதிக அளவில் வருகின்றனர்.
மத்திய அமைச்சரவையின் கல்வித்துறை, அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பிறப்பு சான்றில் உள்ளபடி ஆதார் கார்டிலும் இடம் பெறும் விதத்தில், யு.டி.ஐ.எஸ்.இ., (கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு) போர்டலில் அந்தந்த பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் கார்டு, பிறப்பு சான்று விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில கல்வித்துறை மூலம், போர்டலில் ஆதார் எண்ணுடன், பெயர், பிறப்பு சான்றுடன் ஒத்துப்போகும் வகையில் இடம்பெறாத மாணவர்களின் பெயர் விபரம் வெளியிட்டுள்ளனர்.
மாணவரின் பெயர், பிறந்த தேதி, பிறப்பு சான்றுடன் ஒத்துப்போகும் விதத்தில் ஆதார் கார்டில் மாற்றம் செய்து வருமாறு மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனால், ஆதார் கார்டில் உள்ள பெயர், இனிஷியல், பிறந்த தேதி போன்றவை பிறப்பு சான்றுடன் ஒத்துப்போகும் விதத்தில் இருக்கும் விதத்தில் மாற்றம் செய்யும் முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளிகளில் விடுமுறை எடுத்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோருடன் ஆதார் மையங்களில் கார்டில் மாற்றம் செய்வதற்காக வருகின்றனர்.
எனவே இக்கால கட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் தோறும் ஆதார் சேவை மையத்தை தற்காலிகமாக இயக்கலாம் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
மாணவர் ஆதார் 'அப்டேட்' அவசியம் ஆதார் மையத்தினர் கூறியதாவது: பள்ளிகளில் ஆதாரில் உள்ள பெயர், பிறப்பு தேதி, பிறப்பு சான்றுடன் ஒத்துப்போகும் விதத்தில் திருத்தம் செய்து தருவதற்காக ஆதார் மையங்களுக்கு அனுப்புகின்றனர்.
இது தவிர 5 மற்றும் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் ஆதார் கார்டினை 'அப்டேட்' செய்தாக வேண்டும். இதற்காகவும் மாணவர்கள் அதிகளவில் ஆதார் மையங்களுக்கு வருகின்றனர் என்றனர்.

