/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விடிவு வருமா மழைநீர் கால்வாயை சீரமைப்பது எப்போது பல ஆண்டுகளாக தொடரும் பிரச்னைக்கு
/
விடிவு வருமா மழைநீர் கால்வாயை சீரமைப்பது எப்போது பல ஆண்டுகளாக தொடரும் பிரச்னைக்கு
விடிவு வருமா மழைநீர் கால்வாயை சீரமைப்பது எப்போது பல ஆண்டுகளாக தொடரும் பிரச்னைக்கு
விடிவு வருமா மழைநீர் கால்வாயை சீரமைப்பது எப்போது பல ஆண்டுகளாக தொடரும் பிரச்னைக்கு
ADDED : ஜன 04, 2024 02:17 AM

தேவகோட்டை,; தேவகோட்டையில் உள்ள கால்வாய் அனைத்தும் துார்ந்து போகும் நிலை உருவாகி உள்ளது.
தேவகோட்டையில் உள்ள 18 ஊரணிகளும் மழை நீரை நம்பி தான் உள்ளது. கடந்த காலங்களில் மழைநீர் வடிகால் அகலமாக அமைக்கப்பட்டிருந்ததால் மழை ஊரணிக்கு எளிதாக செல்லும். ஊரணி நிரம்பிய பின் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் தேவகோட்டை கிழக்கு எல்லையை ஒட்டிய கண்மாய்களுக்கு செல்லும் வகையில் அமைத்திருந்தனர்.
சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் ஊரணி நிரம்பி அகன்ற கால்வாய் வழியாக மேலவயல் கண்மாய், இறகுசேரி, செம்பியன் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். ஒரே நீரோட்ட பாதையாக இருந்த ஊரணி, வரத்து கால்வாய், போக்கு வாய்க்கால் நிலை இன்று தலைகீழாக மாறிவிட்டது. பல இடங்களில் தனித்தனியாக இருந்த மழைநீர் கால்வாய், சாக்கடை நீர் கால்வாயை தற்போது நகராட்சியே ஒரே கால்வாயாக மாற்றி விட்டனர். இதனால் பல ஊரணிகளில் சாக்கடை கலப்பதால் அந்தந்த பகுதியினர் ஊரணிக்கு தண்ணீர் வரும் மடைப்பகுதியை அடைத்து விட்டனர். இதன் காரணமாக சில ஆண்டுகளாக எந்த ஊரணியும் நிரம்பவில்லை. ஊரணிகளும் துார்வாரப்படவில்லை.
இது ஒருபுறமிருக்க வரத்து கால்வாய்களை உயர்த்தாததால் பள்ளத்தில் கால்வாய் உள்ளது. கால்வாயின் மேல் பகுதியில் நான்கு அடுக்குகளாக ரோடு அமைத்துள்ளனர். இதில் கழிவு சென்று அடைத்துக் கொண்டதால் பல இடங்களில் ரோட்டின் மேலேயே தண்ணீர் ஓடுகிறது. கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டுமெனில் மண் அள்ளும் இயந்திரத்தால் ரோட்டை வெட்டி தான் பார்க்க வேண்டும்.
கவுன்சிலர் வடிவேல்முருகன் கூறுகையில், நகரின் மேற்கு பகுதியில் மழைநீர் கண்மாய்க்கு செல்லும் பாதை பள்ளமாக உள்ளது. கால்வாய் கட்டினால் கீழ் தளத்தை பூசுவதில்லை. கால்வாய் மேலேயே ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல முறை ரோடு போட்டுள்ளனர். அதிகாரிகள் ரோடு அமைக்கும் முன் கால்வாய்களை பார்வையிட்டு அதற்கேற்ப திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும். கால்வாய் ஒரே சீராக இல்லாததால் சாக்கடை தேங்கி நிற்கிறது என்றார்.