/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ., கண்காணிப்பில் சாட்சிகள்
/
அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ., கண்காணிப்பில் சாட்சிகள்
அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ., கண்காணிப்பில் சாட்சிகள்
அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ., கண்காணிப்பில் சாட்சிகள்
ADDED : ஆக 01, 2025 09:46 PM
திருப்புவனம்:போலீசார் விசாரணையின் போது உயிரிழந்த மடப்புரம் கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சிகளை சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஜூன் 28ல் பக்தரின் நகை திருடு வழக்கில் போலீசார் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்தார். வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., அதிகாரிகள் அஜித்குமாருடன் மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற அவரது சகோதரர் நவீன்குமார், நண்பர் வினோத், சக காவலர் பிரவீன்குமார், ஆட்டோ டிரைவர் அருண் உள்ளிட்ட 23 பேரிடம் சாட்சிகளாக விசாரித்து கையெழுத்து பெற்றுள்ளனர். தற்போது வரை சாட்சிகள் மீண்டும் மீண்டும் விசாரிக்கப்படுகின்றனர்.
சாட்சிகளின் அலைபேசி அழைப்புகளை வைத்தும், சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையிலும் விசாரித்து வருகின்றனர். சாட்சிகள் அஜித்குமார் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாருடன் தொடர்பு கொண்டாலும் அவர்களை மீண்டும் விசாரிக்கின்றனர். இதனால் சாட்சிகள் பலரும் அலைபேசி அழைப்புகளை ஏற்பதில்லை. அஜித்குமார் வழக்கு முடியும் வரை பணி நிமித்தமாக மட்டும் தான் பேசுகின்றனர். உறவினர்கள், நண்பர்களிடம் பேசக்கூட அச்சப்படுகின்றனர்
சாட்சிகள் கூறுகையில், அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி திருப்புவனம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் ௫ நாட்கள் விசாரணை நடத்தினார். தினசரி அழைத்த போது வாக்குமூலம் கொடுத்தோம், தற்போது சி.பி.ஐ., மதுரை அலுவலகத்திற்கு வரவழைக்கின்றனர். காலை முதல் மாலை வரை காத்து கிடக்க வேண்டியுள்ளது. திருப்புவனத்தில் இருந்து ௨ பஸ்கள் மாறி போக வேண்டும். ஜூலை 12ம் தேதி முதல் இதுவரை ௪ முறை போய் வந்துள்ளோம், ஒருமுறை போய்வர 200 ரூபாய் வரை செலவாகிறது என புலம்பினர்.

