ADDED : அக் 26, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பெண்ணிடம் அக்.13ல் அடையாளம் தெரியாத ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அவர் கடன் வாங்கி தருவதாகவும்,அதற்கு டாக்குமென்ட் கட்டணமாக ரூ.21ஆயிரத்து 594 பெற்றுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் கடன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

