/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மகளிர் கபடி : பரமக்குடி கல்லுாரி முதலிடம்
/
மகளிர் கபடி : பரமக்குடி கல்லுாரி முதலிடம்
ADDED : அக் 10, 2024 06:10 AM

சிவகங்கை : சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மாநில மகளிர் கபடி போட்டி நடைபெற்றது. பரிசு தொகையை பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் அளித்தார். போட்டியை மேலாளர் இளங்கோவன் துவக்கி வைத்தார்.
இறுதி போட்டியில் பரமக்குடி எஸ்.எம்.பி., கல்லுாரியும், காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரி அணியும் விளையாடின. இதில், 28: 18 என்ற புள்ளி கணக்கில் பரமக்குடி எஸ்.எம்.பி., கல்லுாரி அணி வென்றது. சான்று, பரிசு கோப்பையை மன்னர் பள்ளிகளின் கல்வி குழு தலைவர் மகேஷ்துரை வழங்கினார். இரண்டாம் பரிசை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் வழங்கினார்.
கோபிகிருஷ்ணன், சேகர், சேதுமாதவன், ராமன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். தேவஸ்தான கண்காணிப்பாளர் வேல்முருகன், உடற்கல்வி ஆசிரியர் அபுதாகீர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

