ADDED : ஜூலை 29, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காரைக்குடி மாநகராட்சி மீனாட்சிபுரத்தில் முஸ்லிம் குடும்பத்தினர் பலர் வசிக்கின்றனர். இவர்களில் 82 குடும்பத்தினர் சொந்த வீடு, நிலமின்றி வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
வீடு, நிலமில்லா முஸ்லிம்களுக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா, இலவச வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும் என வலி யுறுத்தி மனு அளித்தும் இதுவரை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை.
எனவே எங்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் எனக் கேட்டு முஸ்லிம் பெண்கள் நேற்று கலெக்டர் பொற்கொடி யிடம் மனு அளித்தனர்.