/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரத்தில் கூடுதல் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தும் பணி
/
மடப்புரத்தில் கூடுதல் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தும் பணி
மடப்புரத்தில் கூடுதல் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தும் பணி
மடப்புரத்தில் கூடுதல் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தும் பணி
ADDED : ஜூலை 10, 2025 02:47 AM
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் மரணத்தை அடுத்து கூடுதல் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி வெள்ளி போன்ற தினங்களில் சிறப்பு பேருந்துகளும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றன. ஜூன் 27ம் தேதி திருமங்கலம் பக்தர் நிகிதாவின் காரில் இருந்த தங்க நகை திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் 29, போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஐகோர்ட் உத்தரவுப்படி சி.பி.ஐ., விசாரணை நடக்க உள்ளது. கோயிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோயில் வளாகம், பிரகாரம், கோயில் அலுவலகம் உள்ளிட்ட 37 இடங்களில் மட்டுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கார் பார்க்கிங் இடம், கோசாலை உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. அஜித்குமார் கோயில் கோசாலையில் வைத்து விசாரிக்கும் போது தான் உயிரிழந்தார், எனவே கூடுதலாக ஒன்பது சிசிடிவி கேமராக்கள் பொருத்தி உள்ளனர்.