/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
ADDED : செப் 17, 2025 02:35 AM
சிவகங்கை : காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி 38. டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். கடந்த ஜன.26ல் காரைக்குடி அருகே கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் டைல்ஸ் ஒட்ட சென்றார். அந்த வீட்டில் 17 வயது சிறுமி துாங்கி கொண்டிருந்தார். பாண்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமி பெற்றோர் தேவகோட்டை மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் பாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி கோகுல்முருகன் விசாரித்தார். குற்றம் சாட்டப்பட்ட பாண்டிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.