/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலையில் திரியும் மாடுகள் தொழிலாளர்கள் கோரிக்கை
/
சாலையில் திரியும் மாடுகள் தொழிலாளர்கள் கோரிக்கை
ADDED : ஜன 23, 2025 04:12 AM
சிவகங்கை: தமிழகத்தில் உள்ள சாலைகளில் திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதாகவும், வாகன விபத்து ஏற்படுவதாகவும் சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்க பொதுசெயலாளர் விஜயசுந்தரம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கால்நடைகள் பராமரிப்பு இன்றி சாலையில் ஓய்வு எடுப்பது ஆங்காங்கே உள்ளன. இதனால் போக்குவரத்து பணி செய்யும் நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.
ரோட்டில் நடமாடும் மாடுகளால் அரசு பஸ்களை இயக்கும் நாங்கள் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் பஸ் பயணிகளின் உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை உருவாகிறது. தமிழகம் முழுவதும் ரோட்டில் பராமரிப்பு இன்றி சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க அரசு உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

