/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பணியிட பரிசோதனை திட்டம்; சிவகங்கையில் துவக்கம்
/
பணியிட பரிசோதனை திட்டம்; சிவகங்கையில் துவக்கம்
ADDED : ஜன 15, 2024 11:04 PM
சிவகங்கை : மாவட்டத்தில் தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, தனியார் கம்பெனிகளுக்கே நேரடியாக சென்று தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக சுகாதார துணை இயக்குனர் விஜய் சந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தொழிற்சாலை, கட்டுமான உட்பட அமைப்பு சாரா தொழில்களில் உள்ள தொழிலாளர்களுக்கு நேரடியாக தொழிற்சாலைகளுக்கே சென்று பரிசோதனை செய்யப்படுகிறது. அந்தவகையில் தமிழக அளவில் 711 தொழிற்சாலைகளில் 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு ரத்த அழுத்தம், நீரழிவு நோய் பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி காளையார்கோவில் பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது, என்றார்.