UPDATED : நவ 21, 2026 04:40 PM
ADDED : நவ 21, 2026 04:40 PM
சிவகங்கை: சிவகங்கை அரசு அருங்காட்சியகம், தொல்நடைக்குழு, மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் இணைந்து உலக மரபு வார விழாவை முப்பெரும் விழாவாகக் கொண்டாடினர்.
மன்னர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குமரகுரு தலைமை வகித்தார். தொல்நடைக்குழு செயலர் நரசிம்மன் வரவேற்றார். தொல்நடைக்குழு தலைவர் சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் ஸ்ரீவித்யா முன்னிலை வகித்தனர். தொல்நடைக்குழு நிறுவுநர் காளிராசா உலக மரபு வாரவிழா குறித்து பேசினார். முன்னாள் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன், முன்னாள் முதல்வர் வள்ளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் வழங்கினார். தமிழவைத் தலைவர் பகீரத நாச்சியப்பன், தமிழ்ச் சங்கத் தலைவர் முத்துக்கிருஷ்ணன், மருத்துவக் கல்லுாரி கண்காணிப்பாளர் ரமேஷ்கண்ணன் பேசினர். அகழாய்வு காட்டும் தமிழர் பண்பாடு எனும் தலைப்பில் திருச்சி தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி பேசினார். தோட்டக்கலைத்துறை முன்னாள் உதவி இயக்குநர் இளங்கோவன், முன்னாள் காப்பாட்சியர் பக்கிரிசாமி, அப்துல்கலாம் உதவும் கரங்கள் முத்துப்பாண்டி கலந்துகொண்டனர். அரசு அருங்காட்சியக உதவியாளர் ராமஜெயம் நன்றி கூறினார்.
