UPDATED : அக் 29, 2026 10:33 PM
ADDED : அக் 29, 2026 10:28 PM

அ நிறம் | அளவு
சிவகங்கை: உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பக்கவாதம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் கலைவாணி தலைமை வகித்தார்.
நிலைய மருத்துவர் முகமதுரபி, அவசர சிகிச்சை பிரிவு தலைவர் கங்கா நாகலட்சுமி, நரம்பியல் நிபுணர் ரமணன், டாக்டர் அருள் முன்னிலை வகித்தனர். மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பக்கவாதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
