தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தேவர் குரு பூஜைபோக்குவரத்து மாற்றம்

தேவர் குரு பூஜைபோக்குவரத்து மாற்றம்

தேவர் குரு பூஜைபோக்குவரத்து மாற்றம்


UPDATED : அக் 29, 2026 10:33 PM

ADDED : அக் 29, 2026 10:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 10:33 PM ADDED : அக் 29, 2026 10:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் போலீசார் போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளனர்.

மதுரையிலிருந்து பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் செல்லும் அரசு மற்றும் பொதுப்போக்குவரத்து வாகனங்கள் மதுரை, வரிச்சியூர், பூவந்தி, சிவகங்கையை கடந்து சருகணி தொண்டி வழியாக பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் செல்ல வேண்டும்.

ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் ராமநாதபுரம் தொண்டி காளையார்கோவில், சிவகங்கை, வரிச்சியூர் வழியாக மதுரை செல்ல வேண்டும். மதுரையில் இருந்து திருப்புவனம், மானாமதுரை நான்கு வழிச்சாலை வழியாக பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் போக்குவரத்து போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போலீசாரின் போக்குவரத்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us