ADDED : ஆக 25, 2025 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : கல்லலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்க மாநாடு நடந்தது. கிளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை தலைவர் விநாயகமூர்த்தி வரவேற்றார்.
மாவட்ட தலைவர் தங்கமுனியாண்டி மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் அன்பரசன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தார். தமிழ்நாடு தொழில் முன்னேற்ற கழக வருவாய் அலுவலர் சிவதாஸ் சிறப்பு வகித்தார். மகாபிரபு எழுதிய அழகி என்ற புத்தகத்தை டாக்டர் குமரேசன் வெளியிட மாவட்ட குழு சாதிக் பெற்றார். புலவர் காளிராசா தலைமையில் கவியரங்கம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்று வழங்கினர். மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக விநாயக மூர்த்தி, பிரபு, சித்ராதேவி, ேஷாபனா, ராசு உள்ளிட்டோர் தேர்வு செய்தனர்.

