ADDED : ஜூலை 07, 2025 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தங்க முனியாண்டி தலைமை வகித்தார். செயலாளர் அன்பரசன் வரவேற்றார்.
கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்த சொல்லி அனுப்பியுள்ள மத்திய தொல்லியல் துறையை கண்டித்து ஜூலை 26ல் கீழடியில் உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்தனர். வைகை பிரபா கிராமிய பாடல் பாடினார். பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.