/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வு: 2,072 பேர் பங்கேற்பு

ADDED : டிச 22, 2025 06:24 AM

சிவகங்கை: காரைக்குடியில் நேற்று நடந்த போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான எழுத்து தேர்வினை 2,072 பேர் எழுதினர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 1,352 எஸ்.ஐ., பணிக்கான அறிவிப்பு வெளியிட்டனர்.
இதற்காக 2லட்சம் பேர் வரை விண்ணப்பித்தனர். இவர்களுக்கான எழுத்துதேர்வு நேற்று நடந்தது. இந்த மாவட்டத்தை சேர்ந்த 2,997 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கான எழுத்துதேர்வு நேற்று காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரி, அரசு அழகப்பா கல்லுாரி, உமையாள் ராமநாதன் கல்லுாரி தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.
இதில், 2,072 பேர் தேர்வினை எழுதினர். 925 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
டி.ஐ.ஜி., அபினவ்குமார் தலைமையில், சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத், 2 கூடுதல் எஸ்.பி.,க்கள், 2 டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர் உட்பட 600 பேர் தேர்வு அறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.