/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மல்லிகை செடிகளை தாக்கும் மஞ்சள் நோய்
/
மல்லிகை செடிகளை தாக்கும் மஞ்சள் நோய்
ADDED : ஜூன் 20, 2025 12:19 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மல்லிகைச் செடிகளை மஞ்சள் நோய் தாக்குவதால் பயிரிட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இத்தாலுகாவில் பிரான்மலை, ஒடுவன்பட்டி, எம்.கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மல்லிகை சாகுபடி செய்துள்ளனர். தற்போது செடிகளின் இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறி விளைச்சல் பாதித்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எம்.கோவில்பட்டியைச் சேர்ந்த விவசாயி பாண்டியன் கூறியதாவது:
3 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்திலிருந்து மல்லிகை நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்தோம். இப்பகுதியில் மேலும் பல விவசாயிகள் மல்லிகை சாகுபடி செய்கின்றனர்.
இரண்டு ஆண்டு நல்ல விளைச்சல் கண்டு மகசூல் கொடுத்த நிலையில் கடந்த ஓராண்டாக இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பூக்கள் சிறுத்துப் போய் விளைகிறது. கடந்தாண்டு கோடை காலத்தில் இந்த பாதிப்பு வந்த போது அடுத்த சில வாரங்களில் மாறிவிட்டது.
ஆனால் இந்த முறை மஞ்சள் நிறம் மாறாமல் தொடர்ந்து செடிகளில் இலை கருகி கொட்டி வருகிறது. கடைகளில் மருந்து வாங்கி தெளித்தும் எந்தப் பயனும் இல்லை, என்றார்.