ADDED : ஏப் 15, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
கிருங்காக்கோட்டை சடையாண்டி கோயிலில்உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனது. இது சம்பந்தமாக சிசிடிவி காட்சிகளை வைத்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக அ.காளாப்பூரை சேர்ந்த பாஸ்கரன் மகன் கருணாநிதி 19,யை போலீசார்கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 5000 பணம், டூவீலரை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரையும் தேடி வருகின்றனர்.