ADDED : ஜூன் 20, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் அருகே தவசுகுடியை சேர்ந்த ரகுநாதன் மகன் அமர்தீப் பாண்டியன் 21. இவர், புரசடை உடைப்பு அருகே தனியாக வந்தவரை மிரட்டி அலைபேசி மற்றும் பணத்தை வழிப்பறி செய்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட இவரை குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில், கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். காளையார்கோவில் போலீசார் அவரிடம் உத்தரவை ஒப்படைத்தனர்.

