ADDED : செப் 11, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கை செந்தமிழ்நகர் சிந்தாமணி தெரு இளைஞர் ஒருவர் ஆன்லைனில் வேலை தேடியுள்ளார்.
அவருக்கு ஆக.27ல் டெலிகிராம் மூலம் பகுதிநேர வேலை தருவதாகக் குறுஞ்செய்தி வந்தது. அதில் பேசிய நபர் முதலீடு செய்து பணி செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அந்த இளைஞரை நம்ப வைத்தார்.
அவர் கூறியதை நம்பியவர் ஒரு வங்கி கணக்கில் ரூ.8 லட்சத்து 32 ஆயிரத்து 950 செலுத்தினார். பணத்தை பெற்றுகொண்ட அந்த நபர் அவருக்கான லாபத்தொகை கொடுக்காமல் ஏமாற்றினார். மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

