ADDED : ஜன 22, 2025 08:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கையில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை வகித்தார்.
மாநில குழு உறுப்பினர் குமார், மாவட்ட பொருளாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் தமிழ்பெருமாள் மாநாட்டை துவக்கி வைத்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, துணை செயலாளர்கள் கோபால், மருது ஆகியோர் பேசினர். இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சிவாஜி காந்தி அறிக்கை வாசித்தார். புதிய மாவட்ட தலைவராக வீரபத்திரன், செயலாளர் ராகவன், பொருளாளர் பாண்டி தேர்வாகினர்.