ADDED : மே 31, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் பூலாங்குறிச்சி கன்னிமாபாறையைச் சேர்ந்த துரை மகன் பூமிநாதன்19. மற்றும் அஞ்சப்பன் மகன் முருகன் 10 என்ற சிறுவனும் விராமதி கிராமத்திலுள்ள கண்மாய் அருகில் உள்ள தரைமட்டக் கிணற்றில் மீன் பிடிக்க சென்றனர்.
பூமிநாதன் மட்டும் கிணற்று நீரில் இறங்கியவர் மூழ்கியுள்ளார். பயந்த சிறுவன் முருகன் கிராமத்தினரிடம் தகவல் தெரிவித்தார். கிராமத்தினர் கிணற்றில் இருந்து இறந்த பூமிநாதனின் உடலை மீட்டனர். கீழச்சிவல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.