/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறைதீர் மனு எழுதி தர இளைஞர் குழு
/
குறைதீர் மனு எழுதி தர இளைஞர் குழு
ADDED : செப் 23, 2024 06:24 AM
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்ட மனு எழுத சிலர் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, இளைஞர்கள் குழு அமைத்து இலவசமாக மனு எழுதி தர கலெக்டர் ஆஷா அஜித் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இங்கு திங்கள் தோறும் பொது குறைதீர் கூட்டம் நடைபெறும். பட்டா மாறுதல், நலத்திட்ட உதவிகள், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக 800க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் நேரடியாக மனு அளிப்பார்கள்.
திங்கள் தோறும் கலெக்டர் அலுவலகம் முன் சிலர் மனு எழுதி கொடுத்து, கட்டணம் வசூலிப்பதாக கலெக்டரிடம் புகார் சென்றது.
இதையடுத்து, கலெக்டர் அலுவலக தெற்கு பகுதி வாசலில் நேரு யுவகேந்திரா இளைஞர்களை நியமித்து, இலவசமாக மனு எழுதிதர நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள், கலெக்டரிடம் மனு வழங்க நேரடியாக இவர்களிடம் சென்று இலவசமாக மனு எழுதி, பதிவு செய்த பின் கலெக்டரிடம் மனு அளிக்கலாம்.