ADDED : அக் 15, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை கீழவாணியங்குடியை சேர்ந்தவர் விக்னேஷ்குமார் 27. இவர் கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் தனியார் ஏஜன்சியில் பணியாளராக உள்ளார்.
செப்.14ம் தேதி இரவு நண்பர்களுடன் ரோஸ்நகரில் மது அருந்தியுள்ளார். நண்பருடன் டூவீலரில் ராகினிப்பட்டிக்கு வந்து விட்டு டூவீலரில் செல்லும் போது பின்னால் வந்த சிலர் விக்னேஷ்குமாரை கீழே தள்ளி தலையில் வெட்டினர்.
அவர்கள் வந்த காரில் விக்னேஷ்குமாரை கடத்தி தாக்கி ஈசனுார் அருகே இறக்கி விட்டுள்ளனர். விக்னேஷ்குமார் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் இதில் தொடர்புடைய காஞ்சிரங்கால் ராஜசேகர் 29, மதுரை அழகப்பா நகர் டேனியல்ராஜ் 25, இளையான்குடி முகேஷ்குமார் 34, மதுரை அசோக்குமார் 28 ஆகிய 4 பேரை கைது செய்தனர்.