ADDED : அக் 26, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் திருமுருகன் 21. மீன் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவர் புதுவயல் சந்தைக்கு சென்று விட்டு கழனி வாசல் அருகே பைக்கில் வந்தார்.
அப்போது எதிரே வந்த ஆட்டோ பைக்கில் மோதியதில் திருமுருகன் காயமடைந்தார். சிகிசைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு, அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆட்டோவை ஓட்டி வந்த ஸ்ரீராம் நகரை சேர்ந்த ராஜேந்திரன் 54 என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.