/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளைஞர் கொலை வழக்குசிவகங்கை நீதிமன்றத்தில் சரண்
/
இளைஞர் கொலை வழக்குசிவகங்கை நீதிமன்றத்தில் சரண்
ADDED : ஏப் 16, 2025 08:00 AM
சிவகங்கை : காளையார்கோவில் அருகே இளைஞர் கொலையில் 4 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்த நிலையில் நேற்று மேலும் ஒருவர் சிவகங்கை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
காளையார்கோவில் அருகே நெடுவத்தாவு கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் 29. மரக்காத்துாரை சேர்ந்தவர் சிவசங்கர் 28. இருவரும் இருப்பான்பூச்சி கிராமத்தில் உள்ள மதுக்கடை அருகே ஞாயிற்றுகிழமை இரவு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு டூவீலரில் வந்த கும்பல் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.
இதில் சரத்குமார் பலியானார். சிவசங்கர் வெட்டு காயங்களுடன் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து நேற்று இதில் தொடர்புடைய சேதம்பாளையைச் சேர்ந்த விக்ரம் 22, காளையார்கோவில் ஜனா 22, தவசுகுடி பிரபு 35, ஆண்டுரணியைச் சேர்ந்த சிவா 29 ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் இதில் தொடர்புடைய மேலும் ஒருவரான மாதவன்நகரை சேர்ந்த வசந்தகுமார் 24 நேற்று சிவகங்கை ஜேஎம் 1 நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.