ADDED : அக் 17, 2024 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அருகே அகரம் கிராமத்தில் மந்தையம்மன் கோயில் முளைப்பாரி உற்சவம் செவ்வாய் இரவு நடந்தது.
திருவிழாவில் கிராம மக்கள், உறவினர்கள் பங்கேற்றனர். நேற்று அதிகாலை மூன்று மணியளவில் கிராமத்தில் பல வீடுகளில் கிடாவெட்டு நடந்தது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த அஜித்குமார் 26, ராஜேஷ்கண்ணன் 20 இருவரையும் ஜெயராஜ் மகன் ஜெயப்பிரகாஷ் 26, கேலி செய்துள்ளார். ஆத்திரமடைந்த இருவரும் ஆடு வெட்டும் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த ஜெயப்பிரகாஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.