/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்திற்கு இளைஞர்கள் வருகை
/
எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்திற்கு இளைஞர்கள் வருகை
எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்திற்கு இளைஞர்கள் வருகை
எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்திற்கு இளைஞர்கள் வருகை
ADDED : ஜன 21, 2025 05:56 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படை பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சி பெற 1000 க்கும் மேற்பட்ட வீரர்கள் வடமாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், அரசனுார் அருகே இலுப்பக்குடியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இந்தோ திபெத் எல்லை போலீஸ் பாதுகாப்பு படை பயிற்சி மையம் செயல்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் பணிக்கு அனுப்பி வருகின்றனர்.
இலுப்பக்குடி பயிற்சி மையத்தில் புதிதாக வரும் இளைஞர்களுக்கு 44 வாரங்கள் (308 நாட்கள்) துப்பாக்கி கையாளுதல், நீச்சல், மலையேற்றப் பயிற்சி உட்பட நாட்டின் எல்லையை பாதுகாக்கும் விதமாக அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும். இந்த ஆண்டு இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற வடமாநில இளைஞர்கள் ரயில்களில் சிவகங்கைக்கு வருகை தருகின்றனர்.
நேற்று மட்டுமே நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் இலுப்பக்குடி செல்ல சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கினர். இவர்களுக்கு இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படை பயிற்சி மைய டி.ஐ.ஜி., அச்சல் சர்மா தலைமையில் கமாண்டிங் அதிகாரிகள் 44 வார பயிற்சி அளிக்க உள்ளனர்.

