/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர் * தென்காசி பகுதியில் சூறைக்காறு
/
குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர் * தென்காசி பகுதியில் சூறைக்காறு
குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர் * தென்காசி பகுதியில் சூறைக்காறு
குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர் * தென்காசி பகுதியில் சூறைக்காறு
ADDED : மே 28, 2024 10:06 PM
குற்றாலம்:குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. வெ ள்ளப்பெருக்கு காரணமாக ௧௭ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, குற்றாலம் அருவிகளில் கடந்த ௨௫ம் தேதி முதல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமாக விழுந்தது. சாரல் மழை இல்லாத போதிலும், மேக மூட்டமாக இருந்தது. குளிர்ந்த காற்று வீசியது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். வழக்கம்போல் பழைய குற்றாலத்தில் மாலை 5.30 மணிக்கு மேல் அனுமதிக்கப்படவில்லை.
சூறைக்காற்று
தென்காசி சுற்றுப்பகுதியில் நேற்று சூறைக்காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படிருந்த வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனர். பலத்த சூறைக்காற்று வீசுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மின்கம்பங்களின் மரக்கிளைகள் உள்ளிட்டவை விழுந்த உடனே சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.