/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் இருவர் கைது
/
அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் இருவர் கைது
ADDED : செப் 11, 2024 01:49 AM

தென்காசி:சங்கரன்கோவில் அருகே அ.தி.மு.க., பிரமுகர் நடைப்பயிற்சியின் போது வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லுாரை சேர்ந்தவர் வெளியப்பன் 52. அ.தி.மு.க., பிரமுகர். இவரது மனைவி மாரிச்செல்வி கடந்த முறை மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் துணை சேர்மனாக இருந்தார்.
சம்பவத்தன்று காலை வெளியப்பன் மேலநீலிதநல்லுாரில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த கும்பல் அவரை அரிவாளால் கழுத்தில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. கோயில் கொடை விழா முன்விரோதத்தில் வெளியப்பன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. வழக்கில் தேடப்பட்டவர்களில் அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன், கோவேந்திரன் ஆகியோரை மேலநீலிதநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

