/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தென்காசியை சேர்ந்த இருவர் மாலி நாட்டில் கடத்தல்
/
தென்காசியை சேர்ந்த இருவர் மாலி நாட்டில் கடத்தல்
ADDED : நவ 10, 2025 01:24 AM

திருநெல்வேலி: ஆப்பிரிக்க நாடான மாலியில் பணிபுரிந்த இந்திய தொழிலாளர்கள் 5 பேரை ஆயுதக் கும்பல் கடத்திச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களில் இருவர் தென்காசி மாவட்டம் கடையநல்லுார் முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இசக்கிராஜா 36, கண்மணியாபுரத்தைச் சேர்ந்த தளபதி சுரேஷ் 26 ஆவர். இருவரும் மின்மயமாக்கல் திட்டத்தில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். மாலியின் கோப்ரி நகரில் நடந்த இந்த சம்பவத்துக்குப் பிறகு அங்கிருந்த இந்தியர்களை பாதுகாப்புக்காக தலைநகர் பமாகோவுக்கு மாற்றியுள்ளனர். இந்திய துாதரகம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இருவரையும் உடனடியாக மீட்க தமிழக முதல்வரும் இந்திய பிரதமரும் தலையிட வேண்டும்” என உறவினர்கள் கண்ணீர் விட்டு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

