/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
பழைய குற்றாலம் அருவியில் கூடுதல் நேரம் குளிக்க அனுமதி
/
பழைய குற்றாலம் அருவியில் கூடுதல் நேரம் குளிக்க அனுமதி
பழைய குற்றாலம் அருவியில் கூடுதல் நேரம் குளிக்க அனுமதி
பழைய குற்றாலம் அருவியில் கூடுதல் நேரம் குளிக்க அனுமதி
ADDED : ஜூலை 04, 2024 02:33 AM
குற்றாலம்:பழைய குற்றாலத்தில் கூடுதலாக இரண்டு மணி நேரம் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணியர் குளிக்க, காலை ௬:00 முதல் மாலை ௬:00 மணி வரை மட்டுமே அனுமதி இருந்தது.
இந்த நேரத்தை நீட்டிக்க வேண்டும் என வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், காலை ௬:00 முதல், இரவு ௮:00 மணி வரை சுற்றுலா பயணியர் குளிக்க, தென்காசி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி, உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கான உத்தரவை, கலெக்டர் கமல் கிஷோர் பிறப்பித்துள்ளார்.