/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
குற்றாலத்தில் மழை பொழிவு அருவிகளில் குளிக்க தடை
/
குற்றாலத்தில் மழை பொழிவு அருவிகளில் குளிக்க தடை
ADDED : ஆக 06, 2024 12:18 AM

குற்றாலம்:மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில், சில தினங்களாக சாரல் மழை இல்லை. இருப்பினும், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமாக விழுந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக இரவு 7:30 மணிக்கு மேல் ஐந்தருவியில் சற்று தண்ணீர் அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இதுபோல, மெயின் அருவியிலும் நேற்று இரவு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. அரை மணி நேரம் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. பின்னர் தண்ணீர் அளவு குறைந்ததை அடுத்து மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து தண்ணீர் அதிகரித்ததால், மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
தென்காசி, இலஞ்சி, குற்றாலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இரவும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளுமையான சூழல் நிலவியது.