/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தேர்தல் ஆணையம் நடத்திய பேரணியில் தி.மு.க., பிரசாரம்
/
தேர்தல் ஆணையம் நடத்திய பேரணியில் தி.மு.க., பிரசாரம்
தேர்தல் ஆணையம் நடத்திய பேரணியில் தி.மு.க., பிரசாரம்
தேர்தல் ஆணையம் நடத்திய பேரணியில் தி.மு.க., பிரசாரம்
ADDED : ஏப் 07, 2024 01:30 AM
தென்காசி:தென்காசியில் தேர்தல் ஆணையம் சார்பில் உலக சாதனைக்காக பெண்கள், கிராமிய கலைஞர்கள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட பேரணியை மறித்து தி.மு.க., பிரசாரம் செய்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று தென்காசியில் மாணவிகள் உள்பட 7 ஆயிரம் பெண்கள், ஐநுாறு கிராமிய கலைஞர்கள் கலந்து கொண்ட உலக சாதனை வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கலெக்டர் கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். எஸ்.பி., சுரேஷ் குமார்., வருவாய் அலுவலர் பத்மாவதி, ஆர்.டி.ஓ., லாவண்யா, அலுவலர்களும் கலந்து கொண்டனர். புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு குத்துக்கல்வலசை ரவுண்டானா வரை சென்றது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் நுாறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர்.
பேரணி நிறைவு பெறும் இடத்திற்கு முன்பு அவ்வழியாக வந்த தி.மு.க., பேச்சாளர் கோபிநாத் பேரணியை மறித்து பங்கேற்றவர்களிடம் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள் என பிரசாரம் செய்தார். போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் தடுக்கவில்லை.
இது குறித்து கலெக்டரிடம் கேட்டபோது, பிரசாரம் செய்யப்பட்டது குறித்து தெரியாது. புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த பேரணி நடத்தியதற்காக 'எலைட் வேல்ட் ரிக்கார்ட்' அமைப்பு சார்பில் கலெக்டருக்கு சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

