/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
விலை வீழ்ச்சியால் தக்காளியை ரோட்டில் வீசிய விவசாயிகள்
/
விலை வீழ்ச்சியால் தக்காளியை ரோட்டில் வீசிய விவசாயிகள்
விலை வீழ்ச்சியால் தக்காளியை ரோட்டில் வீசிய விவசாயிகள்
விலை வீழ்ச்சியால் தக்காளியை ரோட்டில் வீசிய விவசாயிகள்
ADDED : செப் 08, 2024 02:50 AM

தென்காசி:திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நடப்பு சீசனில் தக்காளி உற்பத்தி அதிகரித்துள்ளது.
குறிப்பாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், வீரகேரளம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு தக்காளியை உற்பத்தி செய்துள்ளனர். ஹைபிரிட் தக்காளி பல நாட்கள் தாக்கு பிடிப்பவை. உள்ளூர் தக்காளி, வியாபாரிகள், மொத்த கமிஷன் மண்டிகளை கடந்து சிறிய கடைகளுக்கு செல்வதற்குள் ஒரே நாளில் சேதம் அடைந்து விடுகின்றன.
கடைகளில் ஒரு கிலோ தக்காளி 30 முதல் 35 ரூபாய் வரை விற்கப்பட்டாலும், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் 8 முதல் 10 ரூபாய் வரையே தருகின்றனர்.
நேற்று தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் விவசாயிகள் விலை குறைவால் லாபம் இல்லை என்பதால் தக்காளியை ரோட்டோரமாக வீசி சென்றனர்.