/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
மெயினருவியில் விழுந்த கற்கள் சுற்றுலா பயணியர் ஐவர் காயம்
/
மெயினருவியில் விழுந்த கற்கள் சுற்றுலா பயணியர் ஐவர் காயம்
மெயினருவியில் விழுந்த கற்கள் சுற்றுலா பயணியர் ஐவர் காயம்
மெயினருவியில் விழுந்த கற்கள் சுற்றுலா பயணியர் ஐவர் காயம்
ADDED : ஆக 22, 2024 02:15 AM

குற்றாலம்:குற்றாலம் மெயின் அருவியில் கற்கள் விழுந்ததில், ௫ பேர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து குளிக்க தடை விதிக்கப்பட்டது.
குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக வெயில் அடித்த போதிலும், அருவிகளில் தண்ணீர் மிதமாக விழுந்து கொண்டிருக்கிது. இதனால் சுற்றுலா பயணியர் வருகையும் விடுமுறை தினங்களில் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை மெயின் அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணியர் மீது திடீரென பெரிய அளவிலான கற்கள் விழுந்தன.
இதில் கடையநல்லுாரை சேர்ந்த உதுமான் மைதீன், 58, கேரள மாநிலம், புனலுார், அஞ்சல் பகுதியை சேர்ந்த ஜமால், 56, பிஜி, 44, தென்காசியை சேர்ந்த அருண்குமார், 25, அறந்தாங்கியை சேர்ந்த கணேசன், 47, காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக, தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சுற்றுலா பயணியர் நலன் கருதி உடனடியாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.
பாறைகளின் இடுக்குகளில் முளைத்திருக்கும் செடிகளால் பாறைகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தண்ணீர் வரத்து குறையும் போது செடிகள் வாடி விடும். அப்போது, கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், பிற அருவிகளில் சுற்றுலா பயணியர் வழக்கம் போல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.