/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
எந்த கட்சியும் ஓட்டுக்கு பணம் தராதது சந்தோஷம் தருகிறது
/
எந்த கட்சியும் ஓட்டுக்கு பணம் தராதது சந்தோஷம் தருகிறது
எந்த கட்சியும் ஓட்டுக்கு பணம் தராதது சந்தோஷம் தருகிறது
எந்த கட்சியும் ஓட்டுக்கு பணம் தராதது சந்தோஷம் தருகிறது
ADDED : ஏப் 21, 2024 12:41 AM
தென்காசி:''தென்காசியில் லோக்சபா தேர்தலில் எந்த கட்சியும் ஓட்டுக்கு பணம் தராதது சந்தோஷம் தருகிறது,'' என, தென்காசியில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
அ.தி.மு.க., கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி கூறியதாவது: தேர்தலில் அனைத்து சமுதாய மக்களும் ஓட்டளித்தனர். தேர்தலும் அமைதியான முறையில் நடந்தது.
நான் தொடர்ந்து இத்தொகுதியில் போட்டியிட்டு வந்ததன் நோக்கம் இந்த தேர்தலில் நிறைவேறியுள்ளது. தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பது என் கனவு.
தென்காசியில் இந்த தேர்தலில் எந்த கட்சியும் யாருக்கும் ஓட்டுக்கு பணம் தரவில்லை என்பது சந்தோஷம் தரக்கூடியது.
தி.மு.க.,வும் இம்முறை ஓட்டுக்கு பணம் தரவில்லை. வரும் தேர்தல்களிலும் அவர்கள் அதனை பின் தொடர வேண்டும். நிறைய பகுதிகளில் ஓட்டுகள் விடுபட்டிருந்தது குறித்து புகார் எழுந்தது. தேர்தல் ஆணையம் அவற்றை சரி செய்திருக்க வேண்டும். 49 பிரிவின் கீழ் விடுபட்டவர்களுக்கு ஓட்டு போட அனுமதி அளித்திருக்க வேண்டும். அதையும் அதிகாரிகள் கடைபிடிக்கவில்லை. இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் உடனிருந்தனர்.

