/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
ஊருக்குள் யானைகள் பொதுமக்கள் அச்சம்
/
ஊருக்குள் யானைகள் பொதுமக்கள் அச்சம்
ADDED : ஏப் 30, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தற்போது மழையின்மையால் நீரோடைகள் வறண்டு விட்டன. இதனால், வனப்பகுதியில் இருந்த விலங்குகள் குடிநீர், உணவுக்காக ஊருக்குள் வர துவங்கியுள்ளன. மேக்கரையில் யானை கூட்டம் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது.
இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி எடுக்கவில்லை. குடியிருப்புகளை ஒட்டி யானைகள் வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.