ADDED : ஆக 19, 2024 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி : தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவல் கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் பூலித்தேவன் 309வது பிறந்தநாள் நிகழ்ச்சி செப். 1ல் மற்றும் ஒண்டிவீரன் 253-வது நினைவு தின நிகழ்ச்சி ஆக.20 ல் நடக்க உள்ளன.
இம்மாவட்டம் முழுவதும் ஆக.,18 மாலை 6:00 மணி முதல் ஆக.,21 காலை 10:00 மணி வரையிலும் ஆக., 30 மாலை 6:00 மணி முதல் செப்.2 காலை 10:00 மணிவரை நான்கு பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற தடையுத்தரவு அமலில் இருக்கும் என கலெக்டர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

