/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
கஞ்சா பறிமுதல் செய்ததால் ஆத்திரம் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
/
கஞ்சா பறிமுதல் செய்ததால் ஆத்திரம் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
கஞ்சா பறிமுதல் செய்ததால் ஆத்திரம் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
கஞ்சா பறிமுதல் செய்ததால் ஆத்திரம் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
ADDED : மே 30, 2024 10:14 PM
தென்காசி:தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நேற்று முன்தினம் காலையில் போலீசார் வாகன சோதனையில் டூ - வீலரில் வந்த சிவலார்குளத்தைச் சேர்ந்த மகேஷ், கஜேந்திரா, நவீன், பெர்லின் ஆகியோரிடம் கஞ்சா இருந்ததால் அவர்களது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்து மூன்று கிலோ கஞ்சா, 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா, பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் கோபமடைந்த நவீனின் அண்ணன் கல்யாணசுந்தரம் என்பவர் நண்பர் நிர்மல்குமாருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவில் ஆலங்குளம் பஜாரில் அரிவாளுடன் சுற்றித்திரிந்தார்.
அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் தங்கதுரை மற்றும் ஜான்சனிடம் பறிமுதல் செய்த 2 லட்சம் ரூபாயை திரும்பத் தருமாறு கேட்டனர். இதில் தகராறு ஏற்பட்டதில் போலீசாரை அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். போலீசார் தப்பி ஓடினர். எனினும் ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் தங்கத்துரைக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. கல்யாணசுந்தரம், நிர்மல் குமாரை ஆலங்குளம் போலீசார் தேடுகின்றனர்.