ADDED : ஜூன் 01, 2024 02:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி : சேர்ந்தமரம் பஸ் ஸ்டாண்டில் அரிவாளுடன் வெட்டிவிடுவேன் என ரகளையில் ஈடுபட்ட விவசாயி கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே குலசேகரமங்கலம் இந்திரா காலனியை சேர்ந்தவர் வேல்சாமி 40. விவசாயி. இவரது தங்கை குடும்பத்திற்கும் இன்னொரு தரப்பினருக்கும் இடையே பூர்வீக வீடு தொடர்பான பிரச்னை போலீஸ் விசாரணையில் உள்ளது. இதில் வேல்சாமி எதிர் தரப்பினரை வெட்டி விடுவதாக கூறி சேர்ந்தமரம் பஸ் ஸ்டாண்டில் தகராறில் ஈடுபட்டார். அந்த வீடியோ வைரல் ஆனதால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.