/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் வருவாய் ஆய்வாளர் கைது
/
பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் வருவாய் ஆய்வாளர் கைது
ADDED : ஜூலை 06, 2024 02:42 AM

தென்காசி,:கணவரை இழந்த பெண்ணுக்கு ஆபாச தகவல் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த வருவாய் ஆய்வாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காந்திநகரை சேர்ந்த இளம் பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். அவரது இறப்பு சான்றிதழ்களைப்பெற அப்பெண் விண்ணப்பித்திருந்தார்.
இதற்காக தாலுகா அலுவலகம் சென்ற அவரின் அலைபேசி எண்ணை பெற்ற வருவாய் ஆய்வாளர் குருவையா அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து இடமாற்றப்பட்ட குருவையா தற்போது தென்காசியில் பணியாற்றி வருகிறார். அங்கிருந்தும் பெண்ணுக்கு அலைபேசியில் ஆபாச தகவல் அனுப்பி தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் குருவையாவை கைது செய்தனர். அவருடன் சேர்ந்து பெண்ணுக்கு பாலியல் ரீதியாக குறுந்தகவல் அனுப்பிய சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்த முத்துகுமார் 30, ராஜா 39, சண்முக பிரபு 39, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.