/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
குற்றாலம் மெயின் அருவி அருகே கடைகள் தீக்கிரை
/
குற்றாலம் மெயின் அருவி அருகே கடைகள் தீக்கிரை
ADDED : ஆக 16, 2024 02:09 AM

தென்காசி:தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி செல்லும் வழியில் கார் பார்க்கிங் பகுதியில் புதிதாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை 9:00 மணிக்கு ஒரு டீக்கடை, சிப்ஸ் கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காஸ் சிலிண்டர் வெடித்ததால் மேலும் தீ பரவியது. தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
குற்றாலம் மெயின் அருவி குற்றாலநாதர் கோயில் அருகே ரதவீதியில் ஆண்டுதோறும் தற்காலிக பேன்சி கடைகள், டீக்கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ஆக., 25 ல் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 20க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாயின. பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் உயிர் தப்பினர். அதன்பின் அங்கு கடைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை. மெயின் அருவிக்கு அருகில் கார்கள் நிறுத்தப்படும் மேல் தளத்தில் புதிய கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.அதில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அனுமதித்துள்ள கடைகளில் விதிமுறை மீறல்களால் தொடர்ந்து விபத்துகள் நடக்கின்றன.