ADDED : ஆக 30, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குற்றாலம்,:தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுள்ளென வெயில் அடித்து வருகிறது. நேற்று காலை முதல் குற்றாலம், இலஞ்சி, தென்காசி பகுதிகளில் காற்றுடன் சாரல் மழை பெய்தது.
மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று காலையில் ஐந்தருவியில் சற்று தண்ணீர் அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மாலையில் தண்ணீர் வரத்து சற்று குறைந்ததை அடுத்து குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பிற அருவிகளில் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

