/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : மே 30, 2024 11:15 PM

குற்றாலம்:குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தென்காசியில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக, குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பரவலாக விழுகிறது.
அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை துவங்கி விட்டதால் மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டியுள்ள குற்றாலத்தின் மலைப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்கிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது.
குற்றாலம் அருவிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. மழை பெய்யாவிட்டாலும் குளுமையான காற்று வீசியது.